புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழா
ADDED :219 days ago
புதுச்சேரி; காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில் நடந்த சனி பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சனிப்பெயர்ச்சியை யொட்டி தனது சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குருவின் வீடான மீன ராசிக்கு சனி பகவான் நேற்று காலை 8: 24 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். அதனை தொடர்ந்து காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நவகிரக சந்நிதியில் வீற்றிருக்கும் சனி பகவானுக்கு நவ நிவர்த்தி பூஜை மற்றும் சிறப்பு யாகம் அரசு சாஸ்திரி தலைமையில் நடந்தது. அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சனி பகவானை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியனை கோவில் தனி அதிகாரி ராஜேஷ் கண்ணா மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் செய்து இருந்தனர்.