உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எறும்பூர் கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி மகா யாகம்

எறும்பூர் கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி மகா யாகம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி மகா யாகம் நடந்தது.


கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் கல்யாணசுந்தரி அம்மன் சமேத கடம்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள நவகிரகங்கள் அனைத்தும் திருமண கோலத்தில் தம்பதியராக உள்ளன. கோவில் பரிவாரத்தில் யோக தட்சிணாமூர்த்தி, யோக குருபகவான், சன்னதிகள் காணப்படுகின்றன. நேற்று சனிப்பெயர்ச்சியையொட்டி, காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சனிபெயர்ச்சி மகா யாகம் நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்டிருந்த கும்பகலசத்தில் உள்ள புனித நீரால், அம்பாளுக்கும் சுவாமிக்கும், மற்றும் நவக்கிரங்களுக்கும் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதொடர்ந்து சனிபகவானுக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !