உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

உடுமலை பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

 உடுமலை: உடுமலை ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில், அம்மன் திருக்கல்யாண உற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது.

உடுமலை சங்கிலி வீதியிலுள்ள, ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டு திருவிழா, கடந்த, மாதம் 24-ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, கருப்பண்ணசுவாமி பூஜையும், திருமூர்த்தி மலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கொடியேற்றுதல், காப்பு கட்டுதல், கும்பம், பூவோடு எடுத்து வருதல், மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அம்மன் திருக்கல்யாண உற்சவம், நேற்று காலை நடந்தது. சூலத்தேவருடன், திருக்கல்யாண அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. மாலையில் பாரம்பரிய இசை முழங்க, அம்மன் திரு வீதி உலா , சங்கிலி வீதி, அமணலிங்க வீதி மற்றும் சதாசிவம் வீதி வழியாக, குட்டைத்திடலை அடைந்தது. அங்கு, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை, 4:00 மணிக்கு கொடி இறக்குதல், கும்பம் விடுதல், நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு முளைப்பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், நாளை மாலை, 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடக்க உள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !