உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாபுரி சாலையில் நடைபாதை அமைக்க பக்தர்கள் வேண்டுகோள்

சிறுவாபுரி சாலையில் நடைபாதை அமைக்க பக்தர்கள் வேண்டுகோள்

கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி சந்திப்பில் இருந்து சிறுவாபுரி கோவில் வரை சாலையோரம் நடைபாதை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் செவ்வாய், ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருவர். அந்த நாட்களில், சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேல் பாயின்ட் சந்திப்பில், இருசக்கர வாகனங்களை தவிர, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும். இங்கிருந்து, ஷேர் ஆட்டோ மற்றும் சிற்றுந்து மூலமாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருவர். சாதாரண நாட்களில் கார், வேன்கள் அனுமதிக்கப்படுகின்றன. இருப்பினும், ஏராளமான பக்தர்கள் அனைத்து நாட்களிலும், இந்த 3 கி.மீ., துாரத்தை பாதயத்திரையாக கடந்து செல்வது வழக்கம். குறுகலான இச்சாலையில் கார், வேன், இருசக்கர வாகனங்களுக்கு இடையே, பாதயாத்திரை பக்தர்கள் விபத்து அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இச்சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !