உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பை பட்டி வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா துவங்கியது

தும்பை பட்டி வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா துவங்கியது

மேலுார்: தும்பை பட்டி வீரகாளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டினர். மார்ச் 24ல் து.அம்பலகாரன் பட்டியில் இருந்து வீரகாளியம்மன், மந்தை கருப்பண சுவாமி சிலைகள் தும்பை பட்டி மந்தைக்கு கொண்டு செல்லப்படும். மார்ச் 26 மந்தையில் இருந்து சுவாமி சிலைகளை கோயிலுக்குக் கொண்டு செல்வர். மார்ச் 27 ல் து.அம்பலகாரன் பட்டியில் இருந்து சுவாமி சிலைகள், பதுமைகளை பக்தர்கள் கோயிலுக்கு கொண்டு செல்வர். குழந்தை வரம் வேண்டியவர்கள் கரும்பினால் ஆன தொட்டில் கட்டியும், பால்குடம் எடுத்தும், மாவிளக்கு ஏந்தியும், அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துவதுடன் திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !