அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பக்தர்கள் நடக்க சிவப்பு கம்பளம்
ADDED :209 days ago
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், வெயிலின் தாக்கத்தை குறைக்க ரூ.ஒரு லட்சம் செலவில் 1000 அடி நீளம் கொண்ட தேங்காய் நார் விரிப்புகள் உபயதாரர் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக கள்ளழகர் சன்னதிக்கு வரும் வெளியேறும் வழிகள், கருப்பணசுவாமி சன்னதி வழியாக இரணியன் கோட்டை வாசல் வரை இவ்விரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்திற்கு ஏற்ப அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்படுகிறது. ஏற்கனவே நிழற்கூரை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது விரிப்புகள் அமைக்கப்பட்டது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.