திருச்சியில் சோழர் கால கல்வெட்டு, ‘தட்சிணாமூர்த்தி சிற்பம் கண்டெடுப்பு
ADDED :53 minutes ago
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் குழுவினர், முசிறி, காவிரி ஆற்றங்கரையோரம் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 10ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால வீணாதர தட்சிணாமூர்த்தி சிற்பம், திருஈங்கோய் மலையில் நந்தா விளக்கு எரிப்பதற்காக, 120 காசுகளை ஒருவர் வழங்கியதற்கான கல்வெட்டு ஆகியன கண்டெடுக்கப்பட்டன. ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘தட்சிணாமூர்த்தி சிற்பத்தில், மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், பொக்கணம் எனப்படும் விபூதி பையை கல்லால மரத்தில் மாட்டி, சிவபெருமான் உபதேசம் செய்வது போன்ற காட்சி செதுக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.