உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுசு: பொங்கலோ பொங்கல்!

தனுசு: பொங்கலோ பொங்கல்!

நட்பை மதிக்கும்  தனுசுராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், செவ்வாய், சனி, ராகு செயல்படுகின்றனர். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உழைப்பின் மூலம் தாராள பணவரவு கிடைக்கும்.பொங்கலோ பொங்கல் என  வாழ்வில் இனிமை சேரும். தம்பி, தங்கைகளின் எண்ணங்களை நிறை வேற்றுவதில் முதன்மையுடன் செயல்படுவீர்கள். வீடு, வாகனத்தில் தேவைப்படுகிற மாற்றங்களை செய்துகொள்வீர்கள். புத்திரர்கள் செயல்திறன் வளர்த்து படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர். பெற்றோரின் சொல்லை மதித்து நடந்து குடும்பத்திற்கு பெருமை தேடித்தருவர். கூடுதல் சொத்து வாங்க சிலருக்கு யோகம் உண்டு. உடல்நலம் சீராக இருக்கும். வெகுநாள் தாமதமான நிலுவைப்பணம் வசூலாகும். தம்பதியருக்கு உறவினர் மத்தியில் பாராட்டு, விருந்து உபசரிப்பு கிடைக்கும். வாழ்வு சிறக்க, நண்பர்கள் சிறந்த ஆலோசனை சொல்வர். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபசெய்தி வரும். தொழிலதிபர்கள் போட்டியைச் சமாளிக்க சில நடைமுறை மாற்றங்களை பின்பற்றுவர். லாபம் நன்றாக இருக்கும். வியாபாரிகள் லாபத்தைக் குறைத்து விற்பனையை அதிகமாக்கி, திருப்திகர லாபமடைவர். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர்.  சலுகைகளும் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடந்துகொள்வர். திருமணமாகதவர்களுக்கு ” செய்தி வந்து சேரும். பணி புரியும் பெண்கள் நம்பிக்கையுடன்செயல்பட்டு  குறித்த காலத்தில் பணிகளை முடிப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். உற்பத்தி, விற்பனை செழித்து எதிர்பார்த்த பணவரவை பெற்றுத்தரும். அரசியல்வாதிகளின் திட்டம் நிறைவேறும். பதவி, பொறுப்பு எளிய முயற்சியால் கிடைக்கும். விவசாயிகளுக்கு பயிர் வளர்க்க தேவையான இடுபொருட்கள் சிரமமின்றி கிடைக்கும். மகசூல் செழிக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தி உண்டு. மாணவர்கள் சிறப்பாக படிப்பர்.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் செயல்கள் இனிதாக நிறைவேறும்.
உஷார் நாள்: 26.1.13 காலை 8.33- 28.1.13 மாலை 5.54.
வெற்றி நாள்: ஜனவரி 16, 17, 18
நிறம்: நீலம், ஆரஞ்ச்       எண்: 7, 8


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !