பச்சையம்மன் கோவிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகம்
ADDED :4685 days ago
திருத்தணி: பச்சையம்மன் கோவிலில், உலக நன்மைக்காக, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.திருத்தணி அடுத்த, முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவிலில், நேற்று, உலக நன்மைக்காகவும் மற்றும் மழை வேண்டியும் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.இதற்காக கோவில் வளாகத்தில், மூன்று யாக சாலை, 108 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் நான்கு கால யாக பூஜைகள் நடந்தன.தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.