உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்மருக்கு பேரங்கியூரில் 18ம் தேதி தீர்த்தவாரி

லட்சுமி நரசிம்மருக்கு பேரங்கியூரில் 18ம் தேதி தீர்த்தவாரி

திருவெண்ணெய்நல்லூர்: பரிக்கல் லட்சுமிநரசிம்மர் சாமிக்கு பேரங்கியூர் பெண்ணையாற்றில் வரும் 18ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் பெண்ணையாற்றில் வரும் 18ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. பல்வேறு ஊர்களில் இருந்து சுவாமிகள் கொண்டு வரப்படுகிறது. பிரசித்திபெற்ற பரிக்கல் லட்சுமி நரசிம்மர், பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி, தடுத்தாட்கொண்டூர் இளஞ்சோலை மாரியம்மன், ஆலங்குப்பம் பாண்டுரங்கன் உட்பட சாமிகள் கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை ஒன்றியசேர்மன் மகாலட்சுமி ஏகாம்பரம், ஊராட்சி தலைவர் வேலாயுதம், பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில் செயல்அலுவலர் முத்துலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சாரியார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !