உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா துவக்கம்

மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா துவக்கம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா பூச்சாட்டுடன் துவங்கியது.


மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், பவானி ஆற்றின் பாலம் அருகே, மிகவும் பழமையான மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா நேற்று பூச்சாட்டுடன் துவங்கியது. வருகிற 24ம் தேதி கம்பம் நடுதலும், 26ம் தேதி கொடியேற்றமும், 27ம் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. 30ம் தேதி தேருக்கு மகுடம் ஏற்றுதலும், குண்டம் திறக்கப்பட உள்ளது. 31ம் தேதி காலை பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைத்து வந்து, குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. ஏப்ரல் 1ம் தேதி மாலை, 4:30 மணிக்கு தேரோட்டமும், இரண்டாம் தேதி இரவு அம்மன் திருவீதி உலாவும், மூன்றாம் தேதி பால்குடம் எடுத்து வருதலும், மாலையில் மஞ்சள் நீராட்டும், மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது. ஆறாம் தேதி மறு பூஜையும், அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !