/
கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் ஸ்தலசயனர் கோவிலில் பங்குனி உத்திர உத்சவம்; தாயாருக்கு திருமஞ்சனம்
மாமல்லபுரம் ஸ்தலசயனர் கோவிலில் பங்குனி உத்திர உத்சவம்; தாயாருக்கு திருமஞ்சனம்
ADDED :199 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ திவ்விய தேசங்களில், 63வது கோவிலாக விளங்குகிறது. இக்கோவிலின் நிலமங்கை தாயாருக்கு, ஆண்டுதோறும் 10 நாட்கள் பங்குனி உத்திர உத்சவம் நடக்கும். அதன்படி, கடந்த 23ம் தேதி துவங்கிய உத்சவம் வரும் ஏப்., 1ம் தேதி வரை நடக்க உள்ளது. இதனால், தினமும் மாலை 4:00 மணிக்கு, தாயார் திருமஞ்சனம் வழிபாடு காண்கிறார். தொடர்ந்து, பூதத்தாழ்வாருக்கு மரியாதை செய்து, நாலாயிர பிரபந்தம், இசை முழக்க சேவையுடன், தினமும் ஒரு வாகனத்தில், கோவிலில் உள்புறப்பாடு உலா சென்று, ஊஞ்சல் சேவையாற்றுகிறார். இறுதிநாளான ஏப்., 1ம் தேதி, சுவாமி திருக்கல்யாணம் என நடக்கிறது