மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
ADDED :8 hours ago
திருவாருர்; மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயி பங்குனி பெருவிழா கடந்த 8ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ராஜகோபாலசுவாமி தங்க சூரிய பிரபை, தங்க கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு காலையில் சுவாமிக்கு, ரதாரோஹணம் நடைபெற்றது. தொடா்ந்து, பக்தா்கள் முன் ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். அலங்கரிக்கப்பட்ட தேரில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளினாா். ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கோவிலை சுற்றி உள்ள 4 வீதிகளையும் வலம் வந்த தேர் இறுதியாக நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.