மூன்று கருடசேவை உத்சவம்: பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் கோவிலில் கோலாகலம்
ADDED :189 days ago
பூந்தமல்லி: பூந்தமல்லியில், திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை, மூன்று கருட சேவை உத்சவம் நடப்பது வழக்கம். இந்தாண்டு கருட சேவை உத்சவ விழா, நேற்று நடந்தது. ரங்கநாதர், வரதராஜர், சீனிவாசர் ஆகிய மூன்று பெருமாள்கள், தனித் தனியே கருட வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை தொடர்ந்து, 4:00 மணிக்கு திரு மஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகமும், 6:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை தீர்த்த பிரசாதம் வினியோகமும் செய்யப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.