உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோயில் விழாவில் பீமனுக்கு வீடுகளில் உற்சாக வரவேற்பு

திரவுபதி அம்மன் கோயில் விழாவில் பீமனுக்கு வீடுகளில் உற்சாக வரவேற்பு

திருவாடானை: திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பீமன் வேடத்தில் வீதிகளில் உலா வந்த போது மக்கள் வீடுகளில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.


திருவாடானையில் திரவுபதி அம்மன் கோயில் விழா மார்ச் 25 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக மகாபாரத கதையில் வரும் வலிமை மிக்க பீமசேனனின் வீதி உலா நடந்தது. பீமன் வேடமணிந்தவர் கதாயுதத்துடன் கம்பீரமாக வீதி உலா வந்தார். பாண்டவர்களில் பலசாலியான பீமன் வீதி உலா வரும் போது மக்கள் வீடுகளில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மக்கள் தங்கள் வீடுகளுக்கு வந்த பீமனுக்கு பால், பழம் மற்றும் பலகாரங்களை வழங்கி மனதார வழிபட்டனர். பீமன் வேடமிட்டவரை தரிசிப்பது அம்மனின் அருளை பெறுவதற்கு சமம் என மூத்த பக்தர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடக்க இருக்கும் விழாக்களில் மகாபாரத கதைகளை சொல்வது மற்றும் நாடக நிகழ்வுகள் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !