சிவபுரிபட்டி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
ADDED :3 hours ago
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி முத்துமாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா நடந்தது. மார்ச் 14 ல் பூச்சொரிதல், மார்ச் 15 ல் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இரவு கிடா பலியிடப்பட்டு சாமி ஆட்டம் நடந்தது. இன்று காலை அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழா ஏற்பாடுகளை மட்டிக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, மணப்பட்டி ஆகிய மூன்று கிராமத்தினர் செய்திருந்தனர்.