உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பாளின் திருவடி தூசு போதும்!

அம்பாளின் திருவடி தூசு போதும்!

சிந்தாமணி என்பது ஒருத்தர் இஷ்டப்படுவதையெல்லாம் கொடுக்கும்  தெய்வாம்சமுள்ள மணி. எதைச் சிந்தித்தாலும்  தந்துவிடுகிற மணியானதால் அப்படிப் பெயர்.  பிலாஸபர்ஸ் ஸ்டோன் என்று வெள்ளைக்கார்கள் ஒன்றைச் சொல்கிறார்கள். அது வேறே. இந்த  சிந்தாமணி வேறே.  அம்பாளின் பாதத்தூளி (திருவடி தூசு)  தரித்திரர்களுக்கு இஷ்டப்பட்ட செல்வத்தையெல்லாம் தருவதில் சிந்தாமணியாக இருக்கிறது. ஒரு  சிந்தாமணியே, கேட்டதையெல்லாம் கொடுத்துவிடும். கேட்டதற்கும் மேலே  எத்தனையோ மடங்கு  அம்பாள் பாதத்தூளி கொடுக்குமாதலால், அவளது திருவடியைப்  பல சிந்தாமணி கோத்த மாலையாக, சவுந்தர்யலஹரியில் ஆச்சார்யாள்  அம்பாளைச்  சொல்லியிருக்கிறார்.  பிறவியை ஜன்ம ஜலதி என்பார்கள். பிறவிப்பெருங்கடல் என்று திருவள்ளுவர் சொல்கிறாரே அது தான். பொய்ம் மாயப் பெருங்கடல் என்று அப்பர் சுவாமிகள் சொல்கிற சம்ஸார சாகரமும் அது தான். அதிலே நாம் முழுகிப் போயிருக்கிறோம். சம்ஸார சாகரத்தில் மூழ்கிக் கிடக்கும் நம்மையெல்லாம் வெளியிலே கொண்டுவந்து தூக்கி  விடுவதாகவும் அம்பாளின் பாதத்தூளி இருக்கிறது. சாதாரண லோக ஜனங்களுக்கு வேண்டிய அறிவு, செல்வம் கொடுப்பது மட்டுமில்லாமல் சம்சார நிவர்த்தியையும் அந்த பாதத் தூளியே கொடுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !