உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  வேண்பாக்கம் வைத்தியநாதசுவாமி கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை

 வேண்பாக்கம் வைத்தியநாதசுவாமி கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை

 பொன்னேரி: பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில், திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.


பொன்னேரி, வேண்பாக்கம் பகுதியில் தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவிலில், கடந்த மாதம் 30ம் தேதி பங்குனி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, கிராம தேவதை வழிபாடு, கோ பூஜை, மஹா தீபராதனை நடந்தன. இரவு, திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. முன்னதாக, வேண்பாக்கம் பெருமாள் கோவிலில் இருந்து மேளதாளங்களுடன், சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டன. அதை தொடர்ந்து, தையல்நாயகி சமேத வைத்தியநாதசுவாமிக்கு வேதமந்திரங்கள் முழுங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, வாண வேடிக்கைகளுடன் திருக்கல்யாணம் நடந்தது. பின், உற்சவ பெருமான் திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !