உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரத்தில் பங்குனி உத்திர விழா: முருகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

விழுப்புரத்தில் பங்குனி உத்திர விழா: முருகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

விழுப்புரம்: பங்குனி உத்திரத்தை யொட்டி, விழுப்புரத்தில் முருகர் கோவில்களில் சுவாமிக்கு மிளகாய்பொடி, காவடி அபிஷேகங்கள் நடைபெற்றது.


பங்குனி உத்திரத்தை யொட்டி, விழுப்புரம் அகரம் பாட்டை, முத்தோப்பில் உள்ள பாலமுருகன் கோவிலில் 15ம் ஆண்டு பங்குனி உத்திர காவடி, செடல் உற்சவம் நடைபெற்றது. உற்சவத்தை யொட்டி, இன்று காலை 7 மணிக்கு பாலமுருகருக்கு அபிேஷக ஆராதனைகளும், 10 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து 11.30 மணிக்கு வெற்றிவேலுக்கு மிளகாய்பொடி, கற்பூர அபிஷேகங்கள் நடைபெற்றது. பின், சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செடல் உற்சவமும், மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு பாலமுருகன் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழுப்புரம் பூந்தோட்டம், கீழ்வன்னியர் தெருவில் முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகபெருமானுக்கு பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதில் காவடி அபிேஷகம், காவடி மற்றும் உற்சவர் புறப்பாடு, மகா தீபாராதனை, வள்ளி தெய்வானை சேனா சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !