சூலூர் கோவில்களில் பூச்சாட்டு திருவிழா ; பக்தர்கள் பரவசம்
சூலூர்: சூலூர் வடக்கு மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள வடக்கு மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கடந்த, 16 ம்தேதி சாமி சாட்டுதலுடன் பூச்சாட்டு திருவிழா துவங்கியது.24 ம்தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. 25 ம்தேதி அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. பக்தர்கள் தினமும் கம்பம் சுற்றி ஆடினர். 27 ம்தேதி மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் பூச்சாட்டு பொங்கல் விழா நடந்தது. முன்னதாக, நொய்யல் ஆற்றில் இருந்து சப்பரத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் மேள, தாளத்துடன் அழைக்கப்பட்டு, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உள்ளது. 7 ம்தேதி மகா முனி பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர். இதேபோல், செங்கத்துறை அங்காளம்மன் கோவில், காடுவெட்டி பாளையம் அம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.