உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலுார் லோயர்கேம்ப் பகவதி அம்மன் கோயில் திருவிழா

கூடலுார் லோயர்கேம்ப் பகவதி அம்மன் கோயில் திருவிழா

கூடலுார்: லோயர்கேம்ப் பகவதி அம்மன் கோயில் விழா மார்ச் 24ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 31ல் குருவனுாத்து அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மாலையில் குருவனுாத்திலிருந்து அம்மன் லோயர்கேம்பிற்கு எழுந்தருளினார். இரவு 12 மணிக்கு மேல் அர்த்த ஜாம பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்தனர். ஏப்.1ல் கோயில் வளாகத்தில் பொதுப் பொங்கலும், ஊர் மக்களின் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடந்தது. பெண்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இன்று கரகாட்டம், ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடந்தது. திருநெல்வேலி ஊத்தங்குளம் குழுவினரின் நையாண்டி மேளம் நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று கோயிலை அடைந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !