உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம் பூஜை

உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம் பூஜை

ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு அபிஷேகம் பூஜை நடந்தது.


இன்று பங்குனி உத்திர விழா யொட்டி ராமேஸ்வரம் கோயில் மேலவாசல் முருகன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் உள்ள முருக பக்தர்கள் பலர் பறக்கும் காவடி, தேர் காவடி, வேல் காவடி எடுத்து வந்து முருகன் சன்னதியில் நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் தாகம் தணிக்க யாத்திரை பணியாளர் சங்கம், தொண்டு அமைப்பினர் சாலை ஓரத்தில் நீர் பந்தல் அமைத்து வழங்கினர்.


சங்கு அபிஷேகம்: ராமேஸ்வரம் கோயிலில் இன்று சுவாமி சன்னதி அருகில் உலக நன்மைக்காக 1008 சங்குகள் வைத்து, கோயில் குருக்கள் சிறப்பு அபிஷேக பூஜை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !