அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா கொடியேற்றம்
ADDED :23 hours ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கலை முன்னிட்டு நேற்று இரவு கொடியேற்றம் நடந்தது. நாடார்கள் உறவின்முறை அலுவலகத்தில் இருந்து மாரியம்மன் படம் பொறித்த கொடி ஊர்வலமாக வால சுப்பிரமணியர் கோயில் சென்று அங்கு பூஜைகள் செய்யப்பட்டது. பின்பு அங்கிருந்து முத்துமாரியம்மன் கோயில் சென்றடைந்தது. அங்கே கொடி மரத்திற்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட 21 நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்த்கள் பங்கேற்றனர்.