பாலமுருகன் கோவில் பங்குனி உத்திர விழா பக்தர்களுக்கு மிளகாய்பொடி அபிஷேகம்
திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த பங்குனி உத்திர விழாவையொட்டி, பக்தர்களுக்கு மிளாய் பொடி அபிஷேகம் நடந்தது.
செஞ்சி ரோட்டிலுள்ள பாலமுருகன் கோவிலின், 49ம் ஆண்டு பங்குனி உற்சவத்தை முன்னிட்டு, நேற்று மாலை சக்தி கலசமும், சக்திவேலும் பூஜித்து வீதியுலா நடந்தது. தொடர்ந்து இன்று காலை 11.30 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிற்பகல் 3 மணியளவில், சக்திவேலுக்கு, பக்தர் ராஜேந்திரன் மற்றும் இருவருக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். தொடர்ந்த பக்தர்கள் பால் காவடி எடுத்தும், செடல், பூந்தேர், வேல்பூஜை செய்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 5 மணியளவில் பக்தர்கள் வேல் குத்திக்கொண்டும், காவடி எடுத்த படி நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.