உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் முதலாமாண்டு வருடாபிஷேகம் நடந்தது.


திருப்புத்தூரின் தென்திசை காவல் தெய்வமாக எழுந்தருளியுள்ளார் பூமாயிஅம்மன். சப்தமாதர்களின் நடுநாயகமாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்கு 11.04.2025 ல் கும்பாபிஷேகம் நடந்தது.  முதலாமாண்டு நிறைவை முன்னிட்டு இன்று வருடாபிஷேகம் நடந்தது. காலை 9:30 மணிக்கு கொலுச்சாவடி மேடையில் அமைக்கப்பட்ட  யாகசாலையில்.முன்னாள் தக்கார் நா.ஆறு.தங்கவேலு முன்னிலையில் பூஜைகள் துவங்கின. பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சார்யர்கள் யாகபூஜைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 11:30 மணி அளவில் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர்,கோபுர,விமான கலசங்களுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பஙகேற்று தரிசித்தனர். ஏற்பாட்டினை அறநிலையத்துறையினர்,வசந்தப்பெருவிழா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !