உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயிலில் தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்தாலம்மன் கோயிலில் தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பரமக்குடி: பரமக்குடி முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழாவில் மின் தீப தேரில் நான்கு மாட வீதிகளில் அம்மன் வலம் வந்தார். கோயிலில் ஏப்., 24 தங்க கொடிமரத்தில் சிங்க கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார். இன்று காலை தொடங்கி ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு அம்மன் சர்வ அலங்காரமாகி தீப தூப ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து வான வேடிக்கைகள் முழங்க அம்மனை சீர்பாதம் தாங்கிகள் அசைந்து ஆடி திருத்தேரில் அமர வைத்தனர். பின்னர் இரவு 8:15 மணிக்கு மகா தீபாராதனைகள் நடந்து, நான்கு மாட வீதிகளில் மின் அலங்கார தீபத்தேர் உலா வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !