தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் விளக்கு பூஜை
ADDED :188 days ago
தேவகோட்டை: தேவகோட்டை தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி முளைப்பாரி விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அதனைத் தொடர்ந்து பல வகை அம்மனின் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் அலங்காரம் நடந்தன. நேற்று ஏராளமான பெண்கள் பங்கேற்று குத்து விளக்கேற்றி வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் கூற பெண்கள் விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.