உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவாழக்கரை அஷ்டாதச புஜ மகாலட்சுமி துர்காதேவி கோவிலில் நவராத்திரி பெருவிழா நாளை துவக்கம்

கருவாழக்கரை அஷ்டாதச புஜ மகாலட்சுமி துர்காதேவி கோவிலில் நவராத்திரி பெருவிழா நாளை துவக்கம்

மயிலாடுதுறை: கருவாழக்கரை மகா சதாசிவ பீடம் அஷ்டாதச புஜ மகாலட்சுமி துர்காதேவி கோவிலில் சத சண்டியாகம், நவராத்திரி பெருவிழா நாளை தொடங்கி 9 நாட்கள் நடைபெறுகிறது.


மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலைக்கு சொந்தமான தரங்கம்பாடி தாலுக்கா கருவாழக்கரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகா சதாசிவ பீட வளாகத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்கா தேவிக்கு நவராத்திரி பெருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது. அக்டோபர் 11ஆம் தேதி நாளை தொடங்கி 19ஆம் தேதி வரை 9 நாட்கள் சத சண்டி ஹோமம் நடைபெறும். கொலு வைக்கப்பட்டு மாலை நவசக்தி அர்ச்சனை, நாட்டிய அஞ்சலி நடைபெறும். அக்டோபர் 19ஆம் தேதி சரஸ்வதி பூஜை அன்று யாகம் பூர்ணாஹுதி, சுமங்கலி கன்னியா பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் நடைபெற உள்ளது. 20 ஆம் தேதி விஜயதசமி அன்று சண்டி ஹோமம் கலசாபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுக்கு அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற உள்ளது. தொடர்ந்து புதிதாக பள்ளிக்குச் செல்லும் மாணவக் குழந்தைகளுக்கு அக்ஷராபியாசம் மகா சதாசிவ பீடாதிபதி ஶ்ரீலஶ்ரீ சாமிநாத சிவாச்சாரியாரால் செய்து வைக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளும் குழந்தைகள் ஞானமும், நல்ல கல்வி அறிவையும் பெறுவார்கள், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல மணவாழ்க்கையும், திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். செல்வம் பெருகி கடன் தொல்லை நீங்கும். தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். எனவே இந்த பூஜைகளில் தவறாது அனைவரும் கலந்து கொண்டு அன்னையின் அருள் பெற வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொடர்புக்கு- 8825863586.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !