கரி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம்: யானை வாகனத்தில் சுவாமி உலா
ADDED :189 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி பெருமாள் அன்ன வாகனம், சிம்ம வாகனம், முத்தங்கி அலங்காரம், ஸ்ரீ ராம அலங்காரம், வைரமுடி சேவை, கருட வாகன அலங்காரம், திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவை ஒட்டி பெருமாள், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, திருத்தேர் நிகழ்ச்சி, குதிரை வாகனம், பரிவேட்டை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று சேஷ வாகனம், தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 5ம் தேதி பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.