/
கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் நலங்கு உற்சவம்: ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்த அண்ணாமலையார்
திருவண்ணாமலையில் நலங்கு உற்சவம்: ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்த அண்ணாமலையார்
ADDED :192 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண மண்டபத்தில், நேற்று இரவு நடந்த நலங்கு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் நலங்கு உற்சவத்தில், சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.