கணேசபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் கொடியேற்றம்
காரைக்குடி: காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் 6ம் தேதி கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
காரைக்குடியில் உள்ள கணேசபுரம் மாரியம்மன் கோயில் 97ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா 6ம் தேதி தொடங்குகிறது. அதிகாலை மகா கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு மேல் கொடியேற்றமும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான பால்குடத் திருவிழா ஏப். 12ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை கரகம், மது முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும் பொங்கல் விழாவும் நடைபெறுகிறது. ஏப். 13ம் தேதி அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. நேற்று இரவு பூச்சொரிதல் விழா நடந்தது. பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பூக்கள் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கணேசபுரம் மாரியம்மன் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.