உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்பையில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி

மும்பையில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி

மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் மும்பை மற்றும் கர்நாடகாவிற்கு கடந்த ஏப்ரல் 2 முதல் 14 வரை யாத்திரை சென்று பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். அதன் ஒரு பகுதியாக பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் நேற்று காலை மும்பையில் உள்ள கலினா பக்த சமாஜத்திற்கு விஜயம் செய்தார். சுவாமிகளுக்கு பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. அங்கு பூஜா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சுவாமிகள் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் பூஜை மற்றும் ஸ்ரீ சக்ர பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து சங்கராச்சார்யர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !