காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி பிரமோற்சவ தெப்பதிருவிழா
ADDED :191 days ago
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ தெப்பதிருவிழா நடந்தது.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா. கைலாசநாதர் யானை வாகனம். வெள்ளி ரிஷபவாகனத்தில் வீதியுலா நடந்தது.கடந்த 1ம் தேதி தேர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.நேற்று இரவு தெப்பதிருவிழா நடந்தது.இதில் சுந்தராம்பாள் சமேதராக கைலாசநாதர் தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.