உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலைகவுண்டன் புதூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

சென்னிமலைகவுண்டன் புதூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

அவிநாசி: அவிநாசி அருகே ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.


அவிநாசி அடுத்த செம்பியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சென்னிமலை கவுண்டன் புதூர் பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா கடந்த 25ம் தேதி காப்பு கட்டுதல், பொரி மாற்றுதல், கம்பம் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.  அதனைத் தொடர்ந்து அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்தல், பொங்கல் வைத்தல், கம்பம் பிடுங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர்,மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மறுபூஜை ஆகிய நிகழ்ச்சிகளுடன் பூச்சாட்டு விழா நடந்தது. கோவில் விழா கமிட்டி மற்றும் ஊர் மக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !