யார் இவள்
ADDED :182 days ago
கலைக்கூடத்தில் இருந்த சிற்பங்களை பார்வையிட்டார் மன்னர் அலெக்ஸ். அதில் கண்களை மூடியபடி கால்களில் இறக்கையுடன் கூடிய பெண் சிற்பம் ஒன்று பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது. ‘யார் இவள்’ எனக் கேட்டார் அலெக்ஸ்.
அச்சிலையை வடிவமைத்த சிற்பி, ‘‘இந்த பெண்தான் நல்ல வாய்ப்பை தருபவள். இவளுடைய பெயர் ‘சந்தர்ப்பம்’. பலர் குறிக்கோள் இல்லாததால், வாய்ப்பை நழுவ விடுகின்றனர். ஒருமுறை போனால் போனது தான். அது நம்மை விட்டு பறந்து விடும் என்பதை இவளின் இறக்கை உணர்த்துகிறது’ என்றார்.