உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஹெத்தையம்மன் தேர் பவனி

ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஹெத்தையம்மன் தேர் பவனி

ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஹெத்தையம்மன் தேர் பவனி கோலாகலமாக நடந்தது.


ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு சமூகத்தார் சார்பில் நாள்தோறும் தேர் உபயம் நடந்து வருகிறது. அதில், அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நேற்று படுகரின மக்களின் ஹெத்தையம்மன் தேர் பவனி நடந்தது. கோவில் வளாகத்தில் துவங்கிய தேர் பவனி லோயர் பஜார், பஸ் ஸ்டாண்ட் , மெயின் பஜார் வழியாக கோவிலை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் திரளான படுகர் பக்தர்கள் பங்கேற்று, பாரம்பரிய நடனமாடி அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !