வாரணாசி காசி விஸ்வநாதர் கங்கா ஆரத்தியில் ட்ரம்ஸ் சிவமணி இசை நிகழ்ச்சி
வாரணாசி: இந்தியாவின் வாரணாசி, ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் போன்ற புனித நகரங்களில் கங்கை நதிக்கரையில் தினமும் மாலை நேரத்தில் கங்கா ஆரத்தி நடைபெறும். அதன்படி காசி விஸ்வநாதர் கோவில் படித்துறைகளில் நடைபெற்ற மா கங்கா ஆரத்தியின் போது, ட்ரம்ஸ் சிவமணியின் மயக்கும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சிவமணி மா கங்காவை முறைப்படி பூஜித்து பின்னர் இந்நிகழ்ச்சியை தொடங்கினார். கங்கா ஆரத்தி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் சிவமணியின் இசை மெட்டுகளும் தாளங்களும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரையும் ஆழ்ந்து நெகிழச் செய்தன. அவரது இந்த இசை அரங்கேற்றத்தால், ஆரத்தி நடைபெறும் சூழல் மேலும் தெய்வீகமும் ஒளியும் நிறைந்ததாகப் பொலிவுற்றது. ஆரத்தி நடைபெறும் பகுதி முழுவதும் "ஹர ஹர மகாதேவ்" எனும் முழக்கங்களால் எதிரொலித்தது. பக்திக்கும் இசைக்கும் இடையிலான இந்தத் தனித்துவமான சங்கமம் நெகிழ செய்தது.