உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தளவாய்புரத்தில் 8 கோயில்களில் பூக்குழி: விடிய விடிய பக்தர்கள் நேர்த்திக்கடன்

தளவாய்புரத்தில் 8 கோயில்களில் பூக்குழி: விடிய விடிய பக்தர்கள் நேர்த்திக்கடன்

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே நேற்று முன்தினம் மாலை முகவூர் தெற்கு தெரு மாரியம்மன் கோயில் பூக்குழி தொடங்கியது. மாஞ்சோலை காலனி மாரியம்மன், வடகாசி அம்மன், ஜமீன் கொல்லங்கொண்டான் மாரியம்மன் கோயிலில் இரவு 8:00 மணிக்கும், அதிகாலை தளவாய்புரம் பத்ரகாளியம்மன், முத்துமாரியம்மன் கோயில், கொம்மந்தாபுரம் பத்ரகாளியம்மன், செட்டியார்பட்டி பத்ரகாளியம்மன் என 8 கோயில்களில் நேற்று அதிகாலை 5:00 மணி வரை பூக்குழி விழாக்கள் நடந்தன. இதுதவிர முத்துச்சாமிபுரத்தில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கலை நிகழ்ச்சிகள் அம்மன் வீதி உலா நடந்தது. அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !