உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீச்சட்டி ஊர்வலம்

குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீச்சட்டி ஊர்வலம்

குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று காந்திபுரம் மக்கள் சார்பில் தீச்சட்டி ஊர்வலம் மற்றும் அம்மன் திருவீதி விழா நடந்தது.


நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் கடந்த 3ல் இருந்து சித்திரை திருத்தேர் விழா நடந்து வருகிறது. இன்று காந்திபுரம் பகுதி பொதுமக்கள் சார்பில் அம்மன் திருவீதி உலா நடந்தது. முன்னதாக, காலையில் காந்திபுரத்தில் இருந்து பக்தர்கள் அபிஷேகப் பொருட்களுடன், தீச்சட்டிகள் ஏந்தியும், ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றும் அம்மனை வழிபட்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !