முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா மூன்றாம் நாள் வழிபாடு; சிறப்பு பூஜை
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயிலில், கந்த சஷ்டி விழாவின் மூன்றாம் நாள் சிறப்பு பூஜை நடந்தது.
தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோயிலில், நவ., 10ம் தேதி, காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. நாள்தோறும், காலையும், மாலையும், யாகசாலை பூஜை நடந்து வருகிறது. மூன்றாம் நாளான இன்று காலை, 6:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பகல், 12:00 மணிக்கு, உச்சிகால பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கந்தசஷ்டி கவசம் பாடினர். மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முன்றாம் நாளான இன்று காலை, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, காலையில், பூதவாகனத்திலும், மாலையில், சித்திர மயில் வாகனத்திலும் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 15ம் தேதி, சூரசம்ஹாரமும், 16ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.