பண்பொழி திருமலைகுமாரசுவாமி கோவிலில் ஆகம விதிகளை மீறியதாக புகார்!
தென்காசி: தென்காசி மாவட்டம், பண்பொழி திருமலைகுமாரசுவாமி கோவிலில் ஆகம விதிகளை மீறி சென்றதாக தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் நியாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் பா.ஜ.,வினர் மனு அளித்தனர்.
தமிழக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி சில நாட்களுக்கு முன்பு பண்பொழி திருமலைகுமாரசுவாமி கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் நியாஸும் கோவிலுக்குச் சென்றார். ஹிந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் ஹிந்து கோவில்களுக்குள் செல்லும்போது உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை நியாஸ் கடைப்பிடிக்காமல் கோவிலுக்குள் சென்றதாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.,வினர் புகார் மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்த தலைமையில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இவ்வாறு முஸ்லிம் பெண் ஒருவர் கோவிலுக்குள் சென்று வந்தது குறித்த சர்ச்சை ஏற்பட்டது.