உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபாங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

ஸ்ரீபாங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அருகே, வஞ்சுவாஞ்சேரியில் உள்ள ‘ஸ்ரீபாங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன்’ கோவிலில், நேற்று மஹா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.


படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி கிராமத்தில், ‘ஸ்ரீபாங்கே பிஹாரி லீலா கிருஷ்ணன்’ கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவேங்கடமுடையான், மஹாகணபதிக்கு சன்னிதிகளும் உள்ளன. ஆகமவிதிப்படி இக்கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கோவில் விமானம், முகத்வாரம், சன்னிதிகள் உள்ளிட்டவை அண்மையில் புனரமைக்கப்பட்டன. இதை தொடர்ந்து, நவ., 5ம் தேதி கும்பாபிஷேக விழா பந்தகால் நடப்பட்டது. 9ம் தேதி அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. நேற்று முன்தினம் காலை, வாஸ்து ஹோமம், அக்னி பிரதிஷ்டை, சயனாதிவாசம் பூர்ணாஹூதி சாற்றுமுறை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேக நாளான நேற்று, காலை 6:00 மணிக்கு விஸ்வரூபம் பூஜை, கும்பதிருவாராதனம், ஹோமம், 8:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 8:45 மணிக்கு கும்ப புறப்பாடு உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து 9:30 மணிக்கு பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் விமான கலசத்தின் மீது ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு மேல் திருக்கல்யாண உத்சவம் நடைபெற்றது. இதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !