அவிநாசி மாரியம்மன் கோவிலல் திருக்கல்யாண உற்சவ விழா
ADDED :16 minutes ago
அவிநாசி: அவிநாசி அருகே நம்பியாம்பாளையம் ஊராட்சி, பனப்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. கடந்த 7ம் தேதி கம்பம் நடப்பட்டு, தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு படைக்கலம் எடுத்து வருதல், அம்மை அழைத்தல், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகளுடன், பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். மாலையில் கம்பம் எடுக்கப்பட்டது. இன்று மஞ்சள் நீர் விழா, மறுபூஜை நடைபெறுகிறது.