கந்த சஷ்டி : பழனியாண்டவர் கோவிலில் 16ம் தேதி திருக்கல்யாணம்
ADDED :6 minutes ago
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம் பாளையத்தில் உள்ள, ஸ்ரீ பழனியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு, நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார விழா துவங்கியது. தொடர்ந்து ஆண்டவருக்கு, பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம்,தேன் மற்றும் பன்னீரால் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். நேற்று காலை , 11:00 மணிக்கு, திரவிய அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும், 15 ம்தேதி காலை சஷ்டி பூஜையும், இரவு, 7:00 மணிக்கு, வேல் வாங்கும் உற்சவமும், 8:00 மணிக்கு, சூரசம்ஹாரமும் நடக்கிறது. மறுநாள், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.