உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் புதிய மயில் வாகன வெள்ளோட்டம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் புதிய மயில் வாகன வெள்ளோட்டம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவ முருகனுக்கு புதிய மயில் வாகனம் வெள்ளோட்டம் நடந்தது.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் உற்ஸவ முருகனுக்கு ரூ 5.5 லட்சம் மதிப்பிலான வெண்கலத்தாலான காலடியில் நாகத்துடன் கூடிய வபுதிய மயில் வாகனத்தை உபயதாரர்கள் தம்பிபட்டி வயி.வாசுதேவன்-சாந்தா தம்பதியினர் வழங்கியுள்ளனர். நேற்று மாலை வெள்ளோட்டத்திற்கான யாகசாலை பூஜைகளை   ரமேஷ்குருக்கள், ராஜா, கணேஷ், ஹரி, பிரதோஷ்  உள்ளிட்ட சிவாச்சார்யர்களால்  நடத்தப்பட்டது, பின்னர் யாகசாலையிலிருந்து கலச புறப்பாடாகி வாகனத்தில் எழுந்தருளி, புதிய வாகனத்தின்  வெள்ளோட்டம் துவங்கியது. பேஸ்கார் சந்திரசேகரன், வைராவி காசி விஸ்வநாதன், உபயதாரர் சார்பில் வயி. மனோகரன், திருமுருகன் திருப்பேரவையினர், பக்தர்கள்  பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !