உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொங்கனகிரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் விரதம் துவக்கம்

கொங்கனகிரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் விரதம் துவக்கம்

அனுப்பர்பாளையம்: திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கனகிரியில் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேய ஸ்ரீ கந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவிலில், 17 ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா வருகிற 15 ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து, 16 ம் தேதி காலை 9:00 மணிக்கு திருகல்யாண நிகழ்ச்சி நடைப்பெறுகிறது.‌ இரண்டு நாட்களும் விழாவினை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் விரத காப்பு அணிந்து கொண்டனர். விழாவில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள் ராஜாமணி, துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !