அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயத்தில் மஹா ருத்ர ஹோமம்
அவிநாசி: அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயத்தில் மஹா ருத்ர ஹோமம். அவிநாசி மங்கலம் ரோட்டில் உள்ள திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயத்தில், ஆதீனம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில் ஆனைமலை அர்ஷ வித்யா பீடம் பூஜ்யஸ்ரீ ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் மஹா ருத்ர ஹோமம் நடைபெற்றது. இதில் ரிஷிகேஷ் ஆர்ஷ வித்யா பீடம் பூஜ்ய ஸ்ரீ சாக்ஷாத் க்ருதானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கி வாழ்த்தினார். இந்த ஹோமத்தில் ஆனைமலை ஆர்ஷா வித்யா பீடம் பூஜ்ய ஸ்ரீ ஸ்வத சித்தானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், தைலாம்பாளையம் பொன்னம்பல சபாபதி தம்பிரான் சுவாமிகள்,ஆனைகட்டி ஆர்ஷ வித்யா பீடம் பூஜ்ய ஸ்ரீ சதாத்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதி சங்கரர் அருளச் செய்த துறவியார் பெருமை குறித்து சொற்பொழிவாற்றி பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.