உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியாங்குப்பத்தில் கந்தர் சஷ்டி பெருவிழா: மயிலம் பொம்மபுர ஆதினம் காப்பு கட்டி துவக்கி வைத்தார்

அரியாங்குப்பத்தில் கந்தர் சஷ்டி பெருவிழா: மயிலம் பொம்மபுர ஆதினம் காப்பு கட்டி துவக்கி வைத்தார்

புதுச்சேரி: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு, 12ம் ஆண்டு கந்தர் சஷ்டி விழா மற்றும் 13ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று துவங்கியது.


விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு அபிேஷகம் மற்றும் மகா தீபாரானை நடந்தது. தொடர்ந்து, மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள் வேலுக்கு காப்புக் கட்டி கந்தர் சஷ்டி விரதத்தை துவக்கி வைத்தார். விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


இன்று 11ம் தேதி மாலை சம்ஹார வேல் அபிஷேகம், 12ம் தேதி மாலை சூரபதுமன் திக்கு விஜயம், 13ம் தேதி மாலை முருகபெருமான் சிவபூஜை செய்தல், முருகப்பெருமான் பெருமை சிறப்பு சொற்பொழிவு, 14ம் தேதி 36 முறை கந்தர் சஷ்டி கவசம் கூட்டு பிரார்த்தனை, மாலை 6:30 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.


முக்கிய நிகழ்வாக, வரும் 15ம் தேதி காலை 10:35 மணிக்கு சுவாமிக்கு அபிேஷக ஆராதனை, மதியம் 2:30 மணிக்கு நவ வீரர்கள் ஊர்வலம், மாலை 4:30 மணிக்கு கந்தர் சஷ்டி சூரசம்ஹாரம் நடக்கிறது. 16ம் தேதி காலை 9:05 மணிக்கு வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கமலஜோதி, சிவசக்தி வேலன் ஆன்மிகக் குழு தலைவர் ருத்ரகுமாரன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !