உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் விஸ்வநாதீஸ்வரர் கோவிலில் ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பூஜை

கடலுார் விஸ்வநாதீஸ்வரர் கோவிலில் ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பூஜை

கடலுார்: கடலுார் விஸ்வநாதீஸ்வரர் கோவிலில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் பூஜை நடந்தது.


கடலுார் ஜவான்ஸ்பவன்–கம்மியம்பேட்டை இணைப்பு சாலையில் உள்ள விஸ்வநாதீஸ்வரர் கோவிலில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கந்த சஷ்டியின் முதல் நாளையொட்டி வேல் பூஜை, ஆலய பூசாரி முருகையன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஹரிதாசன், மாவட்ட தர்மபிரசார் அமைப்பாளர் கணேசன், மாவட்ட மாத்ருசக்தி அமைப்பாளர் மேனகா, நகர மாத்ருசக்தி அமைப்பாளர் அருள்மொழி மற்றும் பக்தர்கள் பங்கேற்று வேலுக்கு அபிஷேகம் செய்து, 108 வேல் போற்றி பாராயணம் செய்தனர். பின், நிர்வாகிகள், ஆலய பூசாரியிடம் அபிஷேகம் செய்த வேலை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !