உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் கந்த சஷ்டி விரதம் இரண்டாம் நாள்: முருகபெருமானுக்கு சிறப்பு பூஜை

கோவில்களில் கந்த சஷ்டி விரதம் இரண்டாம் நாள்: முருகபெருமானுக்கு சிறப்பு பூஜை

கோவை: ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விரதம் துவங்கியதை முன்னிட்டு கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் முருகபெருமானுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கந்த சஷ்டி விரதம் இரண்டாம் நாளான இன்று, கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் ஜி சி டி நகர் பேஸ் - 01ல் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் அமைந்துள்ள வள்ளி தேவ சேனா சமேத சண்முக முருகபெருமானுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த முருகப்பெருமான் அதேபோன்று கோவை தொண்டாமுத்தூர் பகுதி மேற்கு சித்திரைச்சாவடி ரோடு தீனம்பாளையம் போஸ்ட் புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஜய தர்ஷினி மகா யோனி பீடம் ஸ்ரீ மாதா யந்திராலயா ஸ்ரீ மகாமேரு ஸ்ரீ தசமஹா வித்ய ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகபெருமானை தரிசனம் செய்தனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !